சென்னையில் துவங்கியது தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில், 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2025' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, இன்று (ஆக., 1) துவங்கியது.
வரும் 4ம் தேதி வரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
மைதானத்துக்குள் நுழைந்தால், 'இது நம்ம சென்னையா' என ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'ஹைடெக் மெகா ஷாப்பிங்' உலகத்திற்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது.
கடல் மாதிரி கடைகள் விரிந்து பரந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 10 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு ஏற்ற பொருட்களை இங்கு வாங்கலாம்.
கண்காட்சியில் 'ஸ்மார்ட் போன், டிவி, பிரிஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், ஹோம் தியேட்டர், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ என, எந்த பொருட்களையும் தள்ளுபடி, இலவசத்தோடு வாங்கலாம்.
பெண்களே... ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலைநயமிக்க டிசைனர் ஜுவல்லரி, காலணிகள், பாரம்பரிய சேலை ரகங்கள் என, விரும்பியதை மனம்போல் வாங்கலாம்.
உங்கள் அழகான வளைகரங்களுக்கு மேலும் அழகூட்டும் வகையில், அட்டகாசமான டிசைன்களில் மெகந்தியை இலவசமாக வரையலாம்.
ஆண்களுக்கான ரெடிமேட் சர்ட், டி சர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடைகளும் அட்டகாசமான தள்ளுபடி விலைகளில் கிடைக்கும்.
குட்டீஸ்களை குஷிப்படுத்தும், 'கேம் ஷோ' களைகட்டும். பேட்டரி கார், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், ஹேப்பி பன்சிட்டி, பலுான் ஷூட்டிங், ஒட்டக சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஸ்டால் ஸ்டாலாக ஷாப்பிங் செய்து, சோர்ந்து விட்டால் என்ன செய்வது என கவலை வேண்டாம். 'புட் கோர்ட்'க்குள் புகுந்து, கமகமக்கும் வகை வகையான உணவுகளை ருசிக்கலாம்.
ஷாப்பிங்கிற்கு தேவையான அனைத்து ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கும் இக்கண்காட்சியானது, ஒவ்வொரு நாளும் ஆனந்தம் தருகிறது.