நம்பிக்கை தரும் இந்திய ஸ்டார்ட் அப் தொழில்கள்..!
இந்தாண்டு சில துறைகளில் ஆரம்ப கட்ட நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்பாடு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
நல்ல நிதி வசதி கொண்ட ஸ்டார்ட் அப்கள், அறிவார்ந்த நபர்களை அணுகுவது அதிகரித்து வருகிறதென இந்தியாவின் முதல் வென்சர் நிதி நிறுவனமான 100எக்ஸ்.விசி தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் உலகில் சரியான நிறுவனங்களை வடிகட்டி, தேர்வு செய்து இந்தாண்டு முதலீடு செய்வோர், 2030க்குள் தங்களது போர்ட்ஃபோலியோ ஒளிமயமானதாக மாறுவதை காணலாம்.
தற்போது, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 2022ல் மிகப்பெரிய அளவுக்கு அதாவது, 35 சதவீதம் முதலீடு குறைந்துள்ளது.
2021ல் 37.2 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்த நிலையில், 2022ல் (நவ., வரை) 24.7 பில்லியன் டாலர்கள் டாலர்கள் மட்டுமே முதலீடு வந்தது.
க்யூ.எஸ்.ஆர் எனப்படும் உணவு சார்ந்த வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பத்தில் க்யூ.எஸ்.ஆர் எனப்படும் உணவு சார்ந்த வணிகம் பெரும்பாலான துறைகளை விஞ்சுகிறது.
2023ம் ஆண்டில், பல டிஜிட்டல் முதல் நேரடி நுகர்வோர் ஸ்டார்ட் அப்கள், எதிர்காலத்தில் பிரபலமான பெயருடன் போட்டியிடும்.