வானத்தில் நாம் பார்ப்பது நட்சத்திரங்களின் கடந்தகாலமா?

இரவு வானில் நாம் காணும் நட்சத்திரங்கள் அனைத்தும், அப்போது நட்சத்திரம் எவ்வாறு இருக்கிறது என உடனுக்குடன் காண்பதல்ல.

ஓர் டைம் டிராவல் செய்வது போன்று, நாம் நட்சத்திரங்களின் கடந்தகாலத்தையே தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பது, பூமியில் வாழும் மனிதர்களுக்கு மிக அதிகமான வேகம்.

பூமியில், நம்மால் ஒரு பொருளை மைக்ரோ விநாடி கூட தாமதம் இன்றி உடனடியாகப் பார்க்க முடிகிறது.

ஆனால் அண்டத்தில் ஒளியின் வேகம் ஒளி ஆண்டுமூலம் கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டில் ஒளி பயணிக்கும் தூரமே ஒளி ஆண்டு எனப்படுகிறது.

இவ்வாறு பால்வீதியில் இருந்து தொலைதூரத்தில் உள்ள அண்டங்களில் உள்ள நட்சத்திரங்களின் ஒளி, பலநூறு ஒளி ஆண்டுகள் பயணித்து பூமியை வந்தடைகின்றன.

நாம் இரவில் காணும் நட்சத்திரங்களின் ஒளி, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டு மிகமிக தாமதமாக நமது கண்களை வந்தடைவதாகும்.