ருத்திராட்சத்தை யார் அணியலாம்.. எப்போது அணியலாம்…

ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

தூய்மையான ருத்திராட்சத்தை பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.

ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது.

பிறருக்கு கல்வி கற்பிக்கும் போது அணியலாம்.

புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம்.

குறிப்பாக தினமும் கடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம்.

பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாள்களில் ருத்திராட்சம் அணியக் கூடாது.

இரவு நேரம் நாம் கலற்றி வைக்கலாம். காலையில் குளித்து இறை வழிபாடு செய்து அணிந்து கொள்ளலாம்.

ஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட ருத்திராட்சம் உண்டு. ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.