இன்டர்நெட் பயன்பாட்டின் நிலை என்ன?

இன்றைய தொழில்நுட்ப உலகில் வயது வித்தியாசமின்றி இணையம் (இன்டர்நெட்) பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் 2025 கணக்கின்படி, உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் ( 220 கோடி பேர் ) இன்றும் இணைய வசதிகளை பயன்படுத்தாமல் உள்ளனர்.

இவர்களில் 96 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள்.

இது 2024ல் 230 கோடியாக இருந்தது என ஐ.நா., வின் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

2005ல் உலகில் 15 சதவீதம் பேர் இணையம் பயன்படுத்தினர்.

தற்போது இது 75 சதவீதமாக உள்ளது.