விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... விசிட் செய்ய வேண்டிய பிரபலமான கோவில்கள் சில !
நாளை விநாயகர் சதுர்த்தி அல்லது கணேஷ் உத்சவ் உலகம் முழுக்க வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கணேஷா, கணபதி எனப் பல பெயர்களில் விநாயகர் அழைக்கப்படுகிறார். இந்த திருவிழா நேரத்தில் இந்தியாவில் பார்க்கவேண்டிய விநாயகர் கோவில்கள் சில...
பலராலும் மிகவும் விரும்பப்படும் விநாயகர் கோவில்களில் ஒன்றாக மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவில் உள்ளது. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் பிரபலமானது.
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்... திருச்சி என்றாலே மலைக்கோட்டையை பார்க்காவிட்டால் பலருக்கும் சுற்றுலாவே களைக்கட்டாது.
காணிபாக்கம் விநாயகர் கோவில், சித்தூர், ஆந்திரப் பிரதேசம்... 3 சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க தண்ணீர் வழங்கும் கிணற்றில் இருந்து சிலை வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், தமிழகம்...மிகப் பழமையான பாறைக் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஒரே கல்லில் விநாயகர் சிலை செதுக்கப்பட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.
ஸ்ரீ மஹா கணபதி கோவில், ரஞ்சன்கான், மகாராஷ்டிரா... இது திரிபுராசுரன் என்ற அரக்கனைத் தோற்கடிக்கும் பணியைத் துவங்கும் முன் சிவபெருமான், விநாயகரை அழைத்த தலமாகக் கூறப்படுகிறது.
மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரி... விநாயகர் தலங்களில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு பள்ளியறை உள்ளது. இதில், விநாயகருடன் உடனிருப்பது அவரது தாயார் சக்தி தேவியார்.