சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பளபளப்பான படிக குகை..!
ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில் புல்பி என்கிற பகுதியில் உள்ள சுரங்கத்தில் இந்த குகை அமைந்துள்ளது.
இந்த சுரங்கம் உலகின் மிகப்பெரிய ஜியோட் (geode)என்ற பிரகாசமான பொக்கிஷத்தை மறைத்து வைத்துள்ளது.
ஜியோட் என்றால் அடர்பாறை கல்லில் படிகப்பொருள் அல்லது கனிமப் பொருள்களை கொண்ட உட்குடைவுப் பள்ளம்.
முந்தைய காலத்தில் எரிமலை வெடிப்பின் காரணமாக வண்டல் பாறைகள் உடைந்து அதன்னுள் சூடான திரவங்கள் நிரம்பி, குளிர்ந்தவுடன் படிகங்களாக உருவாகத் தொடங்கியது.
அவசரகால படிக்கட்டு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவப்பட்ட பின்னர், 2019 ல் இந்த சுரங்கம் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
8 மீ., அகலம், 2 மீ., உயரம், 2 மீ., ஆழம் கொண்ட இந்த படிக குகையை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
படிகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புவியியலாளர்கள் குழு ஈரப்பதம் ஏற்படாமல் கவனமாக கண்காணித்து வருகின்றது.