இன்று சர்வதேச பூனை தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ம் தேதி சர்வதேச பூனை தினமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த காலத்தில் எகிப்து நாட்டில் பூனைகளை வழிபடும் பாரம்பரியம் இருந்து வந்தது.
பிற்காலத்தில் எலிகளை கட்டுப்படுத்த வீட்டு விலங்காகப் பூனைகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் வளர்க்கத் தொடங்கினர்.
மூடநம்பிக்கை மற்றும் 1348ல் ஐரோப்பா முழுவதும் பரவிய கருப்பு மரணத்தின் பயம் காரணமாக பூனைகள் வெறுக்கப்பட்டன.
இதனால் 1600-க்குள் ஆயிரக்கணக்கான பூனைகள் கொல்லப்பட்டன.
ஆனால் மனிதனுடன், பல ஆயிரம் வருடங்களாக பழகி, கூடவே வாழ்ந்து வருகிறது பூனை.
இதை எல்லாம் கடந்து தற்போது வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு அடுத்து பூனை மிக பிரபலமானது.
பூனை இனத்தைப் பாதுகாக்கும் இலக்குடன் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால் கடந்த 2002ல் சர்வதேச பூனைகள் தினம் அறிவிக்கப்பட்டது.