கைலாய மலை முதல் ஃபூஜி மலை வரை... உலகின் புனிதமான மலைகள் சில !
திபெத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைலாய மலை இந்து, பவுத்தம், ஜைனம் போன்ற பல பிரிவுகளிலும் மிகவும் புனிதமான மலையாக கருதப்படுகிறது.
இந்து புராணங்களில் போற்றப்படும் கம்பீரமான நந்தா தேவி சிகரம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள கர்வால் இமயமலையில் அமைந்துள்ளது; யாத்ரீகர்கள், சாகச பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது.
எகிப்திலுள்ள சினாய் மலை யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆன்மீகம் தவிர பிரமிப்பூட்டும் சூரிய உதயத்தை காண கரடுமுரடான சரிவுகளில் பலரும் பயணிக்கின்றனர்.
கிரீஸிலுள்ள அதோஸ் புனித மலை என அழைக்கப்படுகிறது; யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் உள்ளது. ஆண்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒலிம்பஸ் மலை, கிரீஸ்... கிரேக்க புராணங்களில் இது ஜீயஸ், ஹேரா உட்பட 12 ஒலிம்பியன் கடவுள்களின் வசிப்பிடமாகும். யாத்ரீகர்கள் மட்டுமின்றி சாகசபிரியர்களையும் இந்த கரடுமுரடான பாதை ஈர்க்கிறது.
ஜப்பானின் கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படும் மவுண்ட் ஃபூஜி ஒரு எரிமலை சிகரமாகும். இது பலரையும் வெகுவாக கவர்வதால் சவாலான பயணத்தை ஆர்வமுடன் மேற்கொள்கின்றனர்.
ஜப்பானில் உள்ள வகாயாமா மாகாணத்தின் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, கோயா மலை அல்லது கொயாசன், ஷிங்கோன் பவுத்தத்தின் ஆன்மீக இதயமாகும்.