இன்று உலக தர நிர்ணய தினம்!
உலகில் நுகர்வோருக்குத் தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக். 14ல் உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒரு பொருளை தயாரிப்பதை காட்டிலும் அதன் தரத்தின் அவசியத்தையும் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு அதன் மதிப்பின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் உருவாக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த நாள்.
ஒரு தயாரிப்பு, எப்படி செயல்பட வேண்டும், அதன் தொழில்நுட்ப தரம் என்ன என்று , அதை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இதன் உள் நோக்கம்.
அதே மாதிரி ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருளின் தரத்தில் எப்பொழுதும் முன்னேற்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
தரம் ஒன்றுதான் அதை பயன்படுத்தும் மக்களுக்கு நாம் அளிக்கும் நம்பிக்கை என்பதையும் ஒவ்வொரு நிறுவனங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
போலியை கண்டு ஏமாறாமல் தரம் முத்திரை பதித்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வளமான வாழ்க்கைக்கு நாம் வழி வகுக்கலாம்.