தமிழகத்தில் பார்க்க வேண்டிய சில கடற்கரைகள்

தமிழகத்தின் கைவிடப்பட்ட கடற்கரை நகரமான தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது. இதன் பெயரைப் போன்றே தமிழகம் அல்லது இந்தியாவின் கடைக்கோடியில் உள்ளது.

சென்னை சென்றாலே மெரினா கடற்கரைக்கு விசிட் அடிக்க வேண்டும் என்பது பலரின் தீராக்கனவு. இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகும்.

பாண்டிச்சேரி நகரிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் உள்ள ஆரோவில் கடற்கரை சற்று அமைதியாக நேரத்தை செலவிடும் இடமாகும். இங்கே நீல நிறத் தண்ணீரையும், முழுமையான அழகையும் பார்த்து மகிழலாம்.

நாகப்பட்டினத்திலுள்ள தரங்கம்பாடி அல்லது டிரான்குபார், பாடும் அலைகளின் இடமாகும். இது ஒரு முன்னாள் டேனிஷ் காலனி, அதன் காலனித்துவ கட்டடக்கலை, அழகான கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது.

வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சந்திக்கும் இடமாக கன்னியாகுமரி உள்ளது. சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்க ஏராளமானவர்கள் இங்கு குவிவர்.

பூம்புகார் கடற்கரை... பூம்புகார் வரலாற்று ரீதியாக காவேரிபூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் ​​இது முக்கிய துறைமுகமாக இருந்தது.