இன்று உலக பருத்தி தினம்

விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் ஜவுளித்தேவையில் 27 சதவீதத்தை பருத்தி பூர்த்தி செய்கிறது.

பருத்தி, துணி உலகில் 80 நாடுகளில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

பருத்தி உற்பத்தியைஅதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.7ல் உலக பருத்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பருத்தி விளைச்சலில் சீனா, இந்தியா, அமெரிக்கா முதல் மூன்று இடங்களில் உள்ளன.

'நம் வாழ்வின் துணி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.