இன்று உலக செஞ்சிலுவை தினம்
உலகில் போர் பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் விதமாக 1919ல் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது.
இதன் நிறுவனர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ஹென்றி துனாத் பிறந்த தினமான மே 8ல் உலக செஞ்சிலுவை சங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த அமைப்புக்கு 1917, 1944, 1963 என 3 முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) பலியானவர் களுக்கு நினைவஞ்சலி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் தினமும் ஐ.நா., சார்பில் மே 8ல் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது உலகளவில் பல்வேறு இயற்கை பேரிடர்கள், ஆயுத மோதல்கள் மற்றும் பிற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும் இத்தினம் மூலம் தனி நபர்களும் சமூகங்களும் துன்பங்களைத் தணிக்கவும், ரக்கம், ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான உலக செஞ்சிலுவை தினத்தின் கருப்பொருள் "மனித நேயத்தை வாழ வைப்பது."