ஆரவல்லி மலைத்தொடரின் அற்புதம் இவை

உலகின் பழமையான மலைகளில் ஒன்று ஆரவல்லி மலைத்தொடர்.

இது தென் மேற்கு திசையில் 670 கி.மீ., துாரத்துக்கு பரவியுள்ளது.

டில்லியில் துவங்கி ஹரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத்தின் ஆமதாபாத்தில் நிறைவடைகிறது.

இம்மலைத்தொடரில் உயரமான சிகரம் 'குரு சிஹார்'.

சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து இதன் உயரம் 5650 அடி.

ஆரவல்லி மலையிலிருந்து பனாஸ், சாஹிபி, லுனி ஆறுகள் உற்பத்தியாகின்றன.

இம்மலைத்தொடரில் ராஜஸ்தானிலுள்ள 'மவுன்ட் அபு' மலைப்பகுதி பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இதன் மக்கள்தொகை 23 ஆயிரம்.