350 ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோவிலிருந்து இந்தியா வந்த சாமந்தியின் கதை...
பண்டிகைகள், கோவில் விழாக்களுடன் பிணைக்கப்பட்ட சாமந்தியின் பூர்விகம் மெக்சிகோ. 350 ஆண்டுகளுக்கு முன் இங்கு கொண்டு வரப்பட்டு, அது இந்திய மலராகவே பழகிவிட்டது.
சாமந்தி பூக்களை சூரிய கடவுளின் பரிசு என்று மெக்சிகோ பூர்வகுடியினர் நம்பினர். இதனை அவர்கள் இறந்தவர்களைக் கௌரவிப்பதற்காக பயன்படுத்துவர்.
இந்த சாமந்தி பூக்கள் கடல் கடந்து நாடு நாடாக சென்ற, ஸ்பானிய, போர்த்துகீசிய வர்த்தகர்கள் வர்த்தகர்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்தது.
இதன் பளிச்சிடும் வண்ணம், பெரிதாக பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகாமல் வளரும் தன்மை ஆகியவற்றால் விவசாயிகள் இதனை வணிக பயிராக மாற்றினர்.
விதவிதமாக அழகழகாக சாமந்திகளை கொண்டு மாலைகள் இன்று தயாராவதால் இதன் மவுசு கூடியுள்ளது.
இன்று தசரா, தீபாவளி என பண்டிகைகள், திருமணங்கள், கோவில் விழாக்கள், கட்சி மேடைகள் மற்றும் பிற மத விழாக்கள் அன அனைத்து இடங்களிலும் சாமந்தி மயமே. .
இந்தியாவில் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் மலர் சாகுபடி நடக்கிறது. இதில் சாமந்தி மூன்றில் ஒரு பங்கு பரப்பை கொண்டிருக்கக் கூடும்.
பெரிதாக பராமரிப்பு தேவைப்படாத இம்மலர் ஏக்கருக்கு 4 டன் வரை மகசூல் வழங்கக் கூடியது. ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மே.வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சாமந்தி அதிகம் விளைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சாமந்தி சாகுபடி பரப்பு 50 %க்கும் மேல் கூடியுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 10 - 15 லட்சம் டன் சாமந்தி விற்பனைக்கு வருகிறது. அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000 - ரூ.5,000 கோடி ஆகும்.