அன்னமாச்சார்யா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயராகிறது திருமலை..
அன்னமாச்சார்யா இசை மேதை, ஏழுமலையான் பக்தர்
தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் (1408) பிறந்தவர்.
ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன.
தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரும் பிரபலமான 'சுபத்ரா கல்யாணம்' என்ற நூலை எழுதியவருமான திம்மக்கா இவரது மனைவி.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'அன்னமய்யா' என்ற தெலுங்கு திரைப்படம் 1997-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
அவரது 521 வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் 'சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம்' நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.