இன்று உலக பாரம்பரிய தினம்!

ஒரு நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் பாரம்பரிய சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த யுனெஸ்கோ சார்பில் ஏப்.18ல் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.

1982ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்தான மாநாட்டில், உலக பாரம்பரிய நாள் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

'பேரழிவு, போர்களில் இருந்து பாரம்பரியத்துக்கு ஆபத்து: 60 ஆண்டுகால நடவடிக்கையில் இருந்து தயார்நிலை, கற்றல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலகின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்களை பட்டியலிட்டு, அவற்றை யுனெஸ்கோ பாதுகாத்து வருகிறது.

இதில் இந்தியாவின் 43 இடங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 35 கலாசாரம், 7 இயற்கை, ஒன்று இரண்டும் கலந்தது.

உலகில் அதிக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா உள்ளது. உலகின் மரபுரிமை சின்னங்களில் 36 இடங்கள், அழியும் நிலையில் உள்ளன.

இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.