ஹேப்பி ஜர்னிக்கு சில சுற்றுலா டிப்ஸ்!

சுற்றுலா செல்லும் முன் மொபைல்போன் இருந்தாலும், முக்கிய எண்களை சிறிய டைரியில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

மொபைல்போன் தொலைந்தாலோ, 'சுவிட்ச் ஆப்' ஆனாலோ, அவசரத் தேவைகளுக்கோ வேறு யாரிடமாவது மொபைல் வாங்கி முக்கியமானவர்களுக்கு தகவல் தெரிவித்து விடலாம்.

மேலும், வாகன நிறுவனம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு' போன்றவற்றின், 'ஹெல்ப் லைன்' எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

ஒரே நாளில் அதிக இடங்களை பார்க்க வேண்டாம். சற்று நேரம் ஒதுக்கி வைத்து கொள்ளுங்கள்.

தண்ணீர், பழங்கள், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.

எண்ணெயில் பொரித்த, காரமான உணவுகளை தவிர்க்கலாம்.

மீண்டும் நிரப்பிக் கொள்ளும் வாட்டர் பாட்டில்களை எடுத்து செல்வது நல்லது.