வெறுங்காலில் நடந்தால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக வெறுங்காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும். அதேபோல் நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணாமாக உடலிலுள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கும்.

பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை உள்ள நரம்புகள், மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. வெறுங்காலில் நடப்பதால் இவை புத்துணர்வு பெறும்.

வெறுங்காலில் ஓடுவதும், சிறிது நேரம் நடப்பதும் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவுகிறது.

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், இது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும்.

ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இதயம் சார்ந்த எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது.

வெறுங்காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றன. அதுவும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறுங்காலில் நடந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

காலையில் புல் மீது வெறுங்காலுடன் நடப்பது மன ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மனதை ரிலாக்ஸ் செய்து பதற்றத்தை போக்கி நிம்மதியான உணர்வைத் தருகிறது.

வெறுங்காலில் நடப்பதும் ஓடுவதும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையின் ஒரு அங்கம். தினசரி அரை மணிநேரமாவது வெறுங்காலில் நடக்கலாம். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கு காலணிகள் அணியாமல் நடக்கலாம்.