இன்று தேசிய தடுப்பூசி தினம்!
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் மார்ச் 16ல் தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது.
குறிப்பாக தொற்றுநோயை தடுக்கவும், பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கவும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாட்டில் 1995 மார்ச் 16ல் முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்நாளை நினைவுபடுத்துதல், தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இதன் முக்கிய நோக்கம்.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்யும் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நோய்களைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கையை பாதுகாக்கவும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது அனைவரின் பொறுப்பாகும்.