தொட்டா சிணுங்கி செடி தொட்டாவுடன் இலை சுருங்குவது ஏன்?
தொட்டால் சிணுங்கி இலையிலுள்ள செல்கள் சில திரவப் பொருட்களை கொண்டிருக்கும்.
இத்திரவத்தின் அழுத்தம் காரணமாக அதன் இலை நிமிர்ந்து நிற்கிறது.
இதன் இலையைத் தொடும்போது அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது.
அதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்லில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. மேல்பகுதியில் திரவம் நீங்குவது இல்லை.
எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது.
இதுதான் தொட்டால் சிணுங்கி இலை சுருங்குவதற்கு காரணம்.