ஜப்பானில் அதிகரிக்கும் நட்பு திருமணங்கள்!

2015-ம் ஆண்டு முதல் ஜப்பானில் சமீப காலமாக நட்பு திருமணங்கள் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகிறது.

வெறும் நட்பு அடிப்படையில் மட்டும் திருமணத்தை செய்து கொள்வது ஜப்பானில் இருக்கும் புதிய டிரெண்டாக மாறியுள்ளது.

ஒரு ஆணும் பெண்ணும், திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தாலும், அவர்களிடையே எந்தவிதமான உடலுறவு மற்றும் பரஸ்பர அன்பு என்பதெல்லாம் இல்லை.

இதுதொடர்பாக தம்பதிகள் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஒரே வீட்டில் ரூம்மேட் போல் வாழ்வதாகும்.

குடும்ப அமைப்பை உருவாக்கி கொள்ள மட்டுமே இளைஞர்கள், இதுபோன்ற நட்பு திருமணத்தில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அதிலும் அவர்கள் பொதுவாக குழந்தைகளை ஒன்றாகப் பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளைத் தேர்வு செய்கிறார்கள்.

ஜப்பானில் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 500 பேர் இந்த நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்பு திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் 35 வதை தாண்டியவர்கள், சராசரிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், பொதுவாக உடலுறவை வெறுப்பவர்களாகவோ அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களாகவோ இருப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.