வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய இடங்கள்..!

சுற்றுலா என்றாலே வயதானவர்கள் கூட மகிழ்ச்சியில் குழந்தையாகவே மாறிவிடுவார்கள்.

சுற்றுலா என்பது இயற்கையை, ஆச்சரியங்களை, எளிதில் பார்க்க முடியாதவற்றை கண்டு உணர்ந்து அனுபவிக்கும் ஒரு செயல்முறை என்பதாலேயே சுற்றுலா மீதான ஆர்வம் நமக்கு என்றுமே குறைவதில்லை.

பலரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைக்கும் முக்கியமான சில இடங்கள் மற்றும் அங்கிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

உலகிலேயே அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

லண்டனுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகளின் லிஸ்டில் இருக்கும் மற்றொரு இடம் பாரீஸ் தான். உலகின் சிறந்த நல்ல உணவை சாப்பிடக்கூடிய உணவகங்கள் இங்கே அமைந்துள்ளன.

துபாய்க்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகள் மீண்டும் இங்கு வருவதை விரும்புவார்கள் என்பதே உண்மை. இங்குள்ள உலகிலேயே 163 மாடிகள் கொண்ட மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவை காண வேண்டும் என்பது பலரின் கனவு.

தாய்லாந்தில் இருக்கும் பட்டாயா நகரம் 1960களில் சாதாரண மீன்பிடி கிராமமாக தான் இருந்தது. அங்கிருக்கும் அழகான கடலும், நதியும் சார்ந்த சுற்றுப்புறம் இன்று ஒரு சுற்றுலா தலமாகவே மாறியுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகரமான தைபேவை சுற்றுலா பயணிகள் அதிகம் தேர்வு செய்யும் தலமாக உள்ளது. அங்குள்ள உணவகங்களில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சுவையான உணவுகள் உடனடியாக தயாரித்து வழங்கப்படுகிறது.

உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ரோம் நகரம் துடிப்பான மற்றும் உற்சாகமான நகரமாக காணப்படுகிறது. இங்கு நடக்கத் துவங்கினாலே இயற்கையின் அழகு, கட்டிட கலையின் பிரமாண்டம் என எதையாவது பார்க்கலாம்.