13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்; எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்த ஆய்வு நடந்தது.
இதில், டில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களின் எட்டு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவர்களிடம், 2018 - 2019 ஜூன் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் 'நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆப் இந்தியா' இதழில் தற்போது தான் அந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், உயர் வகுப்புகளுக்கு செல்ல செல்ல போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது. எட்டாம் வகுப்பைவிட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் 2 மடங்கு அதிகமாகவுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் அறிமுகமாகும் ஆரம்ப சராசரி வயது, 13 ஆக உள்ளது. ரசாயனத்தை சுவாசித்து போதை அனுபவிப்பவர்கள் ஆரம்ப வயது, 11...
ஹெராயின் பயன்படுத்தும் மாணவர்களின் ஆரம்ப வயது 12; போதை மாத்திரை பயன்படுத்துபவர்களின் ஆரம்ப வயது 12.5 ஆக உள்ளது.
எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 46.3 % பேர் புகையிலை, 36.5 % பேர் மது, 21.9 % பேர் பாங் எனப்படும் மது வகை...
16.1 சதவீதம் பேர் கஞ்சா, 15.2 சதவீதம் பேர் சுவாசிக்கும் போதை வஸ்துகள் எளிதாகக் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. மாணவியரை விட மாணவர்களிடம் பயன்பாடு அதிகமுள்ளது.
ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 40 % பேர், தங்கள் குடும்பத்தில் புகையிலை அல்லது மது பயன்படுத்தும் உறுப்பினர் உள்ளதாக கூறினர்.
95 % மாணவர்கள் 'போதைப்பொருள் தீங்கு விளைவிக்கும்' என ஒப்புக்கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.