இனி ஸ்மார்ட்போன் போதும்: இதய நோயை கண்டறியலாம்!
நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள் நம் உடலில் ரத்த உறைவைப் பரிசோதிக்க உதவுகிறதாம்.
ஆகுமென்டட் ரியாலிட்டி முறையில் இயங்கும் இதில், நம் உடலில் உள்ள ரத்தக் கட்டிகள் குறித்து தகவல்களைத் திரட்டி ஒரு மாடலை உருவாக்குவதே இந்தக் கண்டுபிடிப்பாகும்.
இதற்காக துல்லியமான சென்சார் கொண்ட போன்களும் உருவாக்கப்படுகின்றதாம்.
இதற்கு நம் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வெவ்வேறு கோணங்களில் நான்கு புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.
இதன் வழி 80 சதவீத இதய நோய்களைக் கண்டறிய முடிந்தாலும் 46 சதவீத நபர்களுக்கு தவறான முடிவுகளையே தருகிறதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இது இன்னும் வேகமாக வளரும் பொழுது இது போன்ற ஸ்மார்ட் போன்கள் நம் கைகளுக்குள்ளும் வருமென விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.