இன்று உலக சகிப்புத்தன்மை தினம்

உலகில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சகிப்புத்தன்மை மிக அவசியம்.

இதை வலியுறுத்தும் விதமாக நவ. 16ல் உலக சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கல்வி, அறிவியல், கலாசாரத்தை வளர்க்க, ஐ.நா.,வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ நிறுவனம், 1945ல் உருவாக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின், 50ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், 'உலக சகிப்புத்தன்மை நாள் கடை பிடிக்கப்பட வேண்டும்' என்ற தீர்மானம், 1995ல், ஐ.நா., சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, 1996 முதல், ஒவ்வோர் ஆண்டும், இத்தினம் பல நாடுகள் கடைபிடிக்கின்றன.

வருங்கால சந்ததியினரை, போரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.

மேலும், மனித குலம் வாழ்வதற்கு தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை மனிதர்களிடையே இருக்க வேண்டும் என்பதை, இந்நாள் நினைவுப்படுத்துகிறது.