இந்தியாவில் சாகச ஆர்வலர்களுக்கான அழகிய சில இடங்கள் !

ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு கரடுமுரடான நிலப்பரப்பு, மடங்கள் மற்றும் அழகிய காட்சிகளை வழங்குவதால், பேக் பேக்கர்கள் லாங் ரைடிங், டிரெக்கிங் என கிராமங்களை ஆராயலாம்.

இந்தியாவின் சாகச தலைநகரான ரிஷிகேஷ் , ஒயிட் வாட்டர் ராஃப்டிங், பங்கி ஜம்பிங் மற்றும் ட்ரெக்கிங் போன்றவற்றை விரும்பும் சாகச ஆர்வலர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இங்கு ஆன்மிக அனுபவத்தையும் பெறலாம்.

லே-லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர்... இது சாகச விரும்பிகளுக்கான ஒரு கனவு இடமாகும். உயரமான மலையேற்றங்கள், லே-மனாலி நெடுஞ்சாலையில் பைக் ரைடிங் ஆகியவை சாகசத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

மணாலி, ஹிமாச்சல பிரதேசம்... டிரெக்கிங், பாராகிளைடிங், கேம்பிங் மற்றும் ரிவர் ராஃப்டிங் என அனைத்து சாகசங்களும் இங்கு கிடைக்கிறது. சோலாங் பள்ளத்தாக்கு, ரோஹ்தாங் கணவாய் மெய்சிலிர்க்க வைக்கும்.

கோவாவில் கடற்கரையை தவிர, நீர் விளையாட்டு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் டிரெக்கிங் என சாகச பிரியர்கள் உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஆராயப்படாத மலையேற்றப் பாதைகள், வனவிலங்குகளைக் கண்டறிதல் மற்றும் பழங்குடியின கிராமங்களுக்குச் செல்வது சாகச பிரியர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியதாகும்.

கூர்க், கர்நாடகா... பசுமையான காபி தோட்டங்கள் மற்றும் அழகிய மலைகளுக்கு பெயர் பெற்றது இது. டிரெக்கிங், முகாம் மற்றும் ரிவர் ராஃப்டிங் என சாகசத்தில் ஈடுபடலாம்.

ரப்பர் மரத்தின் வேர்களால் ஆன பாலம், விசித்திரமான குகைகள், ஆர்ப்பாட்டமாக கொட்டும் நீர்வீழ்ச்சி, தூய டவ்க்கி நதி என இயற்கை அழகை வாரி வழங்கும் இடங்களில் ஒன்று இமயமலை அடிவாரத்திலுள்ள மேகாலயா மாநிலம்.

ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் மற்றும் பசுமையான காடுகளின் வழியாக டிரெக்கிங் என அந்தமான், நிக்கோபார் தீவுகள் சாகசத்துக்கான சாய்ஸாக உள்ளது.