கனவுத்தோட்டத்தில் தூதுவளை செடியை வளர்க்க இதோ டிப்ஸ்

பலவிதமான சுவாச நோய்களை தீர்க்க வந்த துாதுவன் தான், துாதுவளை.

இதற்கு, துாதுளம், துாதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என, பல பெயர்கள் உண்டு.

இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இதன் விதைகளை, மண்ணில் துாவி, நீர் தெளித்து வர, ஒரு வாரத்தில் முளைப்பு வந்துவிடும்.

ஒரு மாதம் ஆனதும், ஒரு அடி உயரம் வளர்ந்து விட்ட செடியை வேறு ஒரு பெரிய பை, ட்ரம் அல்லது தொட்டியில் மாற்றி வளர்க்கலாம்.

செடியை நடும் முன், செம்மண், சாண எரு, தோட்ட மண் கலந்து நல்ல சூரிய ஒளியில் வைத்துவிட்டால் போதும்; படர்ந்து விரிந்து வேலி போல் வளர்ந்து விடும்.

நல்ல தடிமனாய் இருக்கும் அடித்தண்டை நறுக்கி, மண்ணில் நட்டு வைத்தாலும் முளைப்பு வந்துவிடும்.