மேற்கு தொடர்ச்சி மலைகளில்... சாகச விரும்பிகளுக்கான சாலைப் பயணங்கள் !
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மேற்குத் தொடர்ச்சி மலைகள், இந்தியாவின் மிகவும் மெய்சிலிர்க்க வைக்கும் சாலைப் பயணங்களை வழங்குகிறது. அவற்றில் சில...
மும்பை - கோவா... என்எச்66 வழியாகச் செல்லும் இந்த வழித்தடத்தில் கடலோரக் காட்சிகள், அடர்ந்த காடுகளை ரசிக்கலாம். அழகிய கொங்கன் கடற்கரை வழியாக அழைத்துச் செல்கிறது இந்த பயணம்.
பெங்களூரு - ஊட்டி... நீலகிரி மலைகள் வழியாகச் செல்லும் இந்த பாதையில் பசுமையான தேயிலை தோட்டங்கள், பள்ளத்தாக்குகள், பனி மூடிய மலைகளை ரசிக்கலாம். ஹேர்பின் வளைவுகள் சாகச அனுபவத்தை அளிக்கிறது.
சென்னை - மூணாறு... ஆனைமலை மலைகள் வழியாக இயற்கை எழில் கொஞ்சும் இந்த பயணம் இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்கிறது. பசுமையான காடுகள், அருவிகள், பரந்த தேயிலை தோட்டங்கள் என பயணம் விரிகிறது.
புனே - மகாபலேஷ்வர்... இந்த குறுகிய பயணம் ஸ்ட்ராபெரி பண்ணைகள் மற்றும் அமைதியான அழகுக்காக ஈர்க்கிறது. இந்த பாதை சஹ்யாத்ரி மலைத்தொடர் வழியாக, பசுமையான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது.
கொச்சி - வயநாடு... கேரளாவின் பசுமையான நிலப்பரப்பு வழியாக பயணிக்கும் இந்த பாதை அடர்ந்த காடுகள், மசாலா தோட்டங்கள் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள் என இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கிறது.