நவதானியமும்.. முன்னோர்களும்...
அந்த காலகட்டத்தில் விவசாயம் மட்டுமே மிக முக்கிய தொழிலாக இருந்தது.
அடிப்படை கட்டமைப்பு மற்றும் நீர் தேக்க வசதிகள் இல்லாத காரணத்தால் பல கிராமங்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன.
வெள்ளத்தாக்குதலுக்குபின் பலியானவர்கள் போக மீத முள்ளவர்கள் மீண்டு வந்தாலும், அவர்களின் உணவு தேவைக்கு விவசாயம் செய்ய விதைகள் தேவை.
அதை பாதுகாக்க ஒன்பது வகை விதைகளை (ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை) மூன்று முதல் ஐந்து கிலோ அளவில் துணியில் கோபுரங்களிலுள்ள கலசங்களில் கட்டி வைத்தனர்.
அதேபோல் நம் மூதாதையர்கள் வீடு கட்டுவதற்கு முன் நவதானியங்களை தூவி, சில நாட்கள் கழித்தே கட்டுமானப் பணியை துவங்கினர். அந்த நடைமுறை, தற்போதும் பின்பற்றபடுகிறது.
நவதானியங்கள் மண்ணில் உள்ள சத்துக்களை எடுத்துதான் வளரும். ஒவ்வொரு பயிறும் வெவ்வேறு விதமான சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்து வளரும்.
நவதானியங்களில், நன்றாக வளர்ந்துள்ளபயிரை பார்த்து, மண்ணின் கார மற்றும் அமிலத்தன்மையையும், எந்த மாதிரியான தாதுப்பொருட்கள் அடங்கிய மண் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அந்த மண்ணிற்கு ஏற்ப, கட்டுமான முறையை திட்டமிடுவர். இப்படி மூதாதையர்களின் கட்டுமான அறிவியல் இன்றும் இத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் வியப்பாகவே உள்ளது.