இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம்.
'பிளாஸ்மோடியம்' ஒட்டுண்ணி 'அனாபெலஸ்' பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது.
இது ஒருவரை கடிப்பதன் மூலம் தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார்.
இந்நாள் 'உலக கொசு ஒழிப்பு தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.
கொசுக்கள் நீரில் தான் முட்டையிடுகின்றன. மழைக்காலத்தில் அதிகம் பெருகுகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
டயர்கள் டப்பா சிரட்டைகள் பிளாஸ்டிக் பொருட்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தமாக கழுவி கவிழ்த்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.