இன்று சர்வதேச புலிகள் தினம்!

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29ம் தேதி, சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

புலிகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் வாழிடங்களை பாதுகாப்பது பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த நாள் உருவாக்கப்பட்டது.

கடந்த, 2010ல், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த புலிகள் உச்சி மாநாட்டில், இந்த நாள் துவங்கப்பட்டது.

இருபதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில், உலகில் ஏறக்குறைய ஒரு லட்சம் புலிகள் இருந்தன. வேட்டையாடுதல் போன்ற பிரச்னையால் 2010ல் அதன் எண்ணிக்கை, மிகவும் குறைந்தது.

இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட, 13 நாடுகள் இணைந்து, புலிகளை பாதுகாக்க இலக்கைகளை அமைத்தன.

ஒவ்வொரு புலியின் கோடுகளும் தனித்தன்மை வாய்ந்தவை. மனிதர்களின் கைரேகைகளைப் போல, இது, அவற்றை அடையாளம் காண உதவுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன, புலிகள். அவை சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கின்றன.

இந்த நாள், புலிகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், காடுகள், நதிகள், பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.