நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாமா?
தாராளமாக எடுக்கலாம். இன்னும் சொல்லப் போனால் எடுத்தே ஆக வேண்டும்.
பல அகால மரணங்களுக்கு, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவே காரணமாக உள்ளது.
பல நிறுவனங்கள் நீரிழிவு உள்ளவர்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன.
இதில்,
சில விஷயங்களை கவனிக்க வேண்டும். டைப் - 1 நீரிழிவு என்றால் பிரீமியம்
சற்று அதிகம். டைப் - 2 நீரிழிவு என்றால் கொஞ்சம் குறைவு.
எத்தனை ஆண்டுகளாக பாதிப்பால் ஒருவர் அவதிப்படுகிறார் என்பதை பொருத்தும் பிரீமியம் உயரும்.
நம் நாட்டில் பெரும்பாலான இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், டேர்ம்
பாலிசிகளை ஒழுங்காக கையாள்கின்றன. அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், துணைவருக்கு
பணம் கிடைக்கிறது.
பிரீமியம் அதிகமாக உள்ளதாக யோசிக்க வேண்டாம். உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலம் முக்கியம்.