இந்த செப்டம்பரில் ரசிக்க வேண்டிய மலைவாசஸ்தலங்கள் சில !

பனி மூடிய சிகரங்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள் மற்றும் சாகச விளையாட்டுகள் என மணாலி பார்ப்போருக்கு இயற்கை விருந்தளிக்கிறது.

காபி தோட்டங்கள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது கர்நாடகாவிலுள்ள கூர்க்.

அடர்ந்த காடுகள், பசுமையான புல்வெளி, வருடிச்செல்லும் காற்று, வெண் மேகக்கூட்டங்கள் என உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் குளிர்ச்சி ஊட்டுகிறது ஊட்டி.

மூச்சடைக்கக்கூடிய அழகு, கலாச்சார பாரம்பரியம், அழகிய தேயிலை தோட்டங்களுக்கு பெயர் போனது டார்ஜிலிங். பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சிறிது விலகி ரிலாக்ஸ் செய்யலாம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரபலமான மலைவாசஸ்தலமான மூணாறு, தேனிலவு சுற்றுலாவுக்கு பிரபலமானது.

அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள், பூக்களின் இதழ்களில் பனித்துளி என இதமான வானிலை அழகுடன் கொடைக்கானல் உற்சாகமாக வரவேற்கும்.

சிம்லா... இமயமலையின் அழகிய காட்சிகள் மட்டுமின்றி இங்குள்ள கட்டடக்கலை சுற்றுலாப் பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது.

கொட்டிக் குவிந்துள்ள இயற்கை காட்சிகளுடன் சாகச வாய்ப்புகளும் நிறைந்துள்ளதால் இளசுகளின் ஃபேவரைட் இடமாகவுள்ளது லடாக்.