அலையோடு விளையாட.. இந்தியாவில் உள்ள தண்ணீர் விளையாட்டு இடங்கள் சில...!

அலையோடு விளையாடுவதே சுகம் என்றால்.. அலைநீரில் இறங்கினால் எப்படி இருக்கும்? இந்தியாவில் தண்ணீரில் சாகச விளையாட்டு விளையாடக்கூடிய சுற்றுலா தலங்கள் சில...

கோவாவில் வாழைப்பழ படகு சவாரி, பாராசெயிலிங், ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங், விண்ட் சர்பிங், வாட்டர் ஸ்கூட்டர்கள், ரிவர் ராஃப்டிங் உட்பட பல சாகச விளையாட்டுகளை விளையாடலாம்.

அரிய வகை கடல் வாழ் இனங்கள் மற்றும் அழகான நீர்நிலைகள் காரணமாக ஸ்கூபா டைவிங் ஆர்வலர்களுக்கு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சரியான இடமாகும்.

லடாக் அடுத்துள்ள ஜான்ஸ்கர் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாகும். லடாக், காஷ்மீர் சுற்றுலா செல்லும் போது சாகச அனுபவத்தை பெற இங்கும் விசிட் அடிக்கலாம்.

கர்நாடகாவில் உள்ள நேத்ராணி தீவில் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் மிகவும் பிரபலமான சாகச விளையாட்டாகும். தண்ணீர் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களின் விருப்பமான இடங்களில் இதுவும் ஒன்று.

சுற்றுலா பிரியர்களுக்கு உற்சாகத்தை அள்ளித்தரும் இடம் மணாலி. சாகச ஆர்வலர்களுக்கு ரிவர் கிராசிங், ராஃப்டிங், ஆங்லிங் ஆகியவை பிடித்தமான சில தண்ணீர் விளையாட்டுகளாகும்.

நீல நிறத்தில் தெளிவான தண்ணீர் மற்றும் பவளப்பாறைகள் காரணமாக தண்ணீர் சாகசத்துக்கு புகழ்பெற்றது லட்சத்தீவு. ஸ்கூபா டைவிங், கயாக்கிங், கேனோயிங், விண்ட் சர்பிங், வாட்டர் ஸ்கீயிங் உட்பட பல தண்ணீர் விளையாட்டுகள் இங்குள்ளன.