இன்று காதலர்களுக்கான டெடி டே!

பார்ப்பதற்கு அழகாக, புஸுபுஸுவென இருக்கும், கரடி பொம்மையை தங்கள் காதலனுக்கோ, காதலிக்கோ, பிப்., 10ம் தேதி பரிசளிப்பது தான், 'டெடி டே!'

முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் வேட்டையாடும் போது ஒரு விலங்கையும் கொல்லக்கூடாது என்ற அவரின் முடிவை மதிக்கும் நாளாகவும் டெடி டே அனுசரிக்கப்படுவதாக தகவல் உள்ளது.

மென்மையாகவும், அழகாகவும் பொம்மை இருப்பது போலவே உறவும் இருக்க வேண்டுமென்பதை உணர்த்தும் தினம் இது.

டெடி பியர் காதல், நேசம், அரவணைப்பு என அன்பின் அனைத்து வெளிப்பாட்டின் ஒரு வடிவமாக பார்க்கப்படுகிறது

பொதுவாக பெண்களுக்கு குழந்தைகளுக்கு டெடி பியர் பொம்மைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் குழந்தைகள் முதலேயே டெடி பியர் கட்டிபிடிக்கும் ஒரு பழக்கம் சிலருக்கு உண்டு.

இந்த நாளில், உங்கள் அன்பிற்குரியவருக்கு அழகான டெடி பியரையை பரிசளிக்கலாம். அதுவும் காதலின் அழகான அடையாளமாகும்.