7 இலக்குகளை கொண்ட தமிழக பட்ஜெட்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், தன் முதல் பட்ஜெட்டாக, 2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, இன்று காலை சட்டசபையில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
'மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் 7 பகுதிகளாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
சமூக நீதி, கடைக்கோடி தமிழருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என 7 இலக்குகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
குடிசை இல்லா தமிழகம் இலக்கை எட்ட 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
ஊரக பகுதிகளில் 2000 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டித் தரப்படும். இதற்காக ரூ.365 கோடி ஒதுக்கீடு.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
சென்னை அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.1500 கோடி ஒதுக்கீடு.