குடகு மலை காற்று வாங்க போகலாம் கூர்க்!
காவிரி உருவாகும் இடம், குடகு மலை. இங்கு தான், தலைக்காவிரி அமைந்துள்ளது.
கர்நாடகத்தில் புகழ்பெற்ற மலை வாசஸ்தலமாக இருப்பதால், கர்நாடகத்தின் காஷ்மீர் என அழைக்கின்றனர்.
அப்பே அருவி, திபெத்திய தங்கக் கோவில், ஓம்காரேஸ்வரா கோவில், மகாராஜாக்கள் ஓய்வெடுத்த ராஜா சீட் பார்க், மடிக்கேரி கோட்டை என, பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.
நவம்பர் முதல் மே வரை, இங்கு சீசன். திடீர் திடீரென்று மழை வரும் என்பதால், சற்று முன்னெச்சரிக்கையுடன் போவது நல்லது.
தவிர, இங்கு விளையும், காபி மிளகு, ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு ஆகியவை ஸ்பெஷல்.
மைசூரில் இருந்து, 120 கி.மீ., மங்களூரில் இருந்து, 136 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ரயில் பயணம் என்றால், மைசூரில் இறங்கி பஸ்சில் பயணம் செய்யலாம். விமானத்தில் சென்றால், மங்களூரில் இறங்கி அங்கிருந்து பஸ் அல்லது காரில் போகலாம்.