இ - ரூபாய் - யு.பி.ஐ., என்ன வித்தியாசம்?
எந்த ஒரு யு.பி.ஐ., பரிவர்த்தனையும், வங்கிகளின் இடைநிலையை உள்ளடக்கியதாகும்.
நீங்கள் யு.பி.ஐ., செயலியை பயன்படுத்தும்போது, உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, பெறுபவர் கணக்குக்கு மாற்றப்படுகிறது.
மேலும், உங்கள் வங்கியிலிருந்து 1,000 ரூபாயை எடுத்து, உங்கள் போனில் இருக்கும் வாலட் செயலியில் வைத்துக்கொண்டு, கடைகளில் பொருட்களை வாங்கலாம்.
இதேபோல், இ - ரூபாயையும் உங்கள் போனில் உள்ள வாலட்டில் வைத்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கடையில் பொருள் வாங்கும்போதோ அல்லது, வேறு ஒருவருக்கு பணம் கொடுக்கும் போதோ, உங்கள் வாலட்டில் இருக்கும் பணம், அவர்களுடைய வாலட்டுக்கு போய்ச் சேரும்.
யு.பி.ஐ., ல் இரு வங்கி கணக்குகளுக்கு இடையே பரிமாற்றம் நடைபெறும். இ-ரூபாயில், இரு தனிநபர்கள், வணிகங்கள் இடையே, நேரடியான ரொக்க பரிமாற்றம் போல நடைபெறும்.
இதில் வங்கிகளின் இடைநிலை அல்லது 'ரோல்' என்பது இருக்காது என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.