தேவையில்லாத பயத்தை விரட்டியடிக்கலாமே ?
ஒரு விஷயத்தைப் பற்றி நினைக்கும்போதே பயம் அதிகமானால் அது
வாழ்க்கையின் பல நிலைகளில் வெற்றியடையும் திறனை கணிசமாக பாதிக்கும் என்பது
உளவியல் நிபுணர்களின் கருத்தாகும்.
அதிக பயம் மன பதட்டம் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது செயல்திறன் மற்றும் முடிவெடுக்கும் திறனைக்கூட பாதிக்கும்.
குறிப்பாக அதிக பயம் உடல் நலத்தை பாதித்து பக்கவாதத்துக்கு வழிவகுக்கும்.
பயம் மற்றும் எதிர்மறையான எண்ணங்களை வெல்வது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
பயம், எதிர்மறை எண்ணங்களை வெல்வதில் உறுதியாக இருப்பதே வெற்றிக்கு முக்கியப் படியாகும்.
நேர்மறையான எண்ணங்களால் தன்னைத்தானே ஊக்குவிப்பது பயத்தை நீக்கி ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
எனவே, பயம் மற்றும் எதிர்மறை சிந்தனையின் தாக்கத்தைப் புரிந்து
அதை நீக்குவதன் மூலம், தடைகளைத் தாண்டி வெற்றிக்கான இலக்குகளை எளியாக
அடையலாம்.