கலபாகோஸ்... உலகின் அதிசய தீவு இது!
தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடார் நாட்டின் மாகாணங்களில் ஒன்று கலபாகோஸ்.
அந்நாட்டு தலைநகர் குவைட்டோவில் இருந்து 965 கி.மீ., துாரத்திலுள்ளது.
பரப்பளவு 8010 சதுர கி.மீ., இதில் 127 தீவுகள் உள்ளன; மக்கள்தொகை 33 ஆயிரம்.
உலகின் மற்ற பகுதியில் காண இயலாத அபூர்வ விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் இங்கு வாழ்வதால், இது 'அதிசய தீவு' என அழைக்கப்படுகிறது.
1978ல் ஐ.நா.,வின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
பரிணாம வளர்ச்சியை கண்டறிந்த விஞ்ஞானி சார்லஸ் டார்வின், இத்தீவில் ஆராய்ச்சி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.