சுற்றுச்சூழல் காவலன் மூங்கில் காடுகள்: இன்று உலக மூங்கில் தினம்
மூங்கில்களுக்கு இயற்கையிலேயே பாக்டீரியாக் களையும், பூஞ்சைகளையும் எதிர்க்கும் சக்தி இருக்கிறது.
வீடு கட்ட, ஏணிகள் செய்ய மூங்கில்கள் பயன்படுகின்றன. கூடை, நாற்காலி, திரைகள் எனப் பல பொருட்களில் மூங்கில் பயன்படுகிறது.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மூங்கில் பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்., 18ல் உலக மூங்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இதன் ஆயுட்காலம் 60 ஆண்டுகள். ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.
இந்தியாவில் 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.