இனி டிவிட்டரில் பணம் சம்பாதிக்கலாம்...எலான் மஸ்க் சொன்ன குட் நியூஸ்!

உலகம் முழுவதும் பலகோடி பேர் பயன்படுத்தி வரும் டிவிட்டர் தளத்தில் சமீபகாலமாக ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆட்குறைப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம்க்கு தடை, ப்ளூ டிக் -க்கு சந்தா என எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தை வாங்கியதிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

கன்டென்ட் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருப்பதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

டிவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டிவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்தந்த கன்டென்ட் கிரியேட்டர்கள் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும்.

இந்த வெரிஃபைடு அந்தஸ்தை வைத்திருப்போர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது.