இன்று தேசிய அறிவியல் தினம் !

1928 ஆம் ஆண்டு முதல் இன்றைய நாளை (பிப்.,28) நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.

இதைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் சர்.சி.வி.ராமனின் கண்டுபிடிப்பை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்நாளை தேசிய அறிவியல் தினமாக மாற்றியது, அறிவியலின் திருப்புமுனையாக அமைந்த இவருடைய 'ராமன் எஃபெக்ட்' என்ற ஒளியைப் பற்றிய கண்டுபிடிப்பு தான்.

இவர் ஒரு சிறிய பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒளி ஒரு திரவத்தின் வழியாக செல்லும் பொழுது ஒளி சிதறல் நிகழ்கிறது. திரவத்தால் சிதறிய ஒளியின் ஒவ்வொரு பகுதியும் வேறு நிறத்தில் இருந்தது.

இதை இவர் 1928ல் கண்டறிந்தார். இந்த விளைவை கண்டறிந்ததை அறிவித்த பிறகு ஏழு ஆண்டுகளில் 700 ஆய்வு கட்டுரைகள் வெளியாகின.

இந்த ராமன் எஃபெக்டை கண்டறிந்ததற்காக 1930ல் இவர் நோபல் பரிசு பெற்றார்.