இந்தியாவில் விசிட் செய்ய 1,000 ஆண்டுகளுக்கு மேலான சில வரலாற்று நினைவுச்சின்னங்கள்
மத்தியப் பிரதேசத்தில் 3ம் நூற்றாண்டில் அசோகரால் கட்டப்பட்ட சாஞ்சி ஸ்தூபி உலகின் மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.
மகாராஷ்டிராவிலுள்ள கைலாசா கோயில் எல்லோரா குகை வளாகத்தின் ஒரு பகுதி. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில், 8ம் நூற்றாண்டின் கட்டட, கலை அழகை காட்டுகிறது.
தமிழகம், மகாபலிபுரத்திலுள்ள கடற்கரை கோவில், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடகா, ஹம்பியிலுள்ள விருபாக்ஷா கோவில் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது; உயரமான கோபுரம், தூண்கள் கொண்ட மண்டபங்கள் என வியக்க வைக்கிறது.
தமிழகத்தின், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கி.பி 1010ல் சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது கட்டடக்கலையின் பிரமாண்டமாக உள்ளது.
ஒடிசாவில் கி.பி 1250ல் கட்டப்பட்ட கோனார்க் சூரிய கோவிலில், தேரின் 24 கல் சக்கரங்களும், 7 பாய்ந்து செல்லும் குதிரைகளும் காலத்தின் போக்கைக் குறிக்கின்றன.