கண்ணை கவரும் சுற்றுலா இடம் மால்பே பீச்!
கர்நாடக மாநிலத்தின் இயற்கை துறைமுகம் என்று அழைக்கபடுகிறது, மால்பே பீச். பாறைத் தீவுகள் போல் இருப்பது தான், இதன் சிறப்பம்சம்.
இங்கிருக்கும் பாறைகள், எரிமலைக் குழம்பில் உருவானவை.பார்க்க, ஹாலிவுட் படங்களில் வரும் கரீபியன் தீவுகள் போல காட்சியளிக்கிறது, இந்த கடற்கரை.
மால்பே பீச்சில் இருந்து, செயின்ட்மேரி தீவுக்கு, பெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகில் போகலாம்.
தவிர, கோவாவை போலவே இங்கு, 'பீச் ரெசார்ட்'டுகள் பல உள்ளன.
உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இருந்து, 6 கி.மீ., மால்பே பீச்சை அடைந்து விடலாம்.
ரயில் அல்லது விமானத்தில், சென்னையில் இருந்து மங்களூருக்கு வந்து, அங்கிருந்து பஸ்சில், 66 கி.மீ. பயணித்தால், மால்பே பீச்சை அடையலாம்.