டிரெக்கிங் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு
தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 40 மலையேற்ற வழித்தடங்கள் குறித்த, டிஜிட்டல் வரைபடங்கள், கடந்தாண்டு தயாரிக்கப்பட்டன.
மலையேற்றத்துக்கு செல்ல விரும்புவோர் பதிவு செய்வதற்காக, https://www.trektamilnadu.com/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது.
இதில், எளிதான பகுதி 14; மிதமான பகுதி 14; கடினமான பகுதி 12 இடங்கள் என, பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி உள்ளூர் மக்கள், பழங்குடியினர், வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் பங்கேற்பாளராக பதிவு செய்ய, ரூ. 700 முதல், ரூ. 5,999 வரை, பல்வேறு நிலைகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த பயணத் திட்டத்துக்கு, மக்கள் ஆதரவு கிடைத்தாலும், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதனால், மலையேற்ற பயணங்களுக்கான, கட்டணத்தை குறைக்க, வனத்துறை முடிவு செய்தது; பல்வேறு வழித்தடங்களுக்கான கட்டணங்கள், சலுகை அடிப்படையில், 30 % குறைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, கொடைக்கானல் - கும்பக்கரை 'கேம்ப்' பயணத்துக்கு, ரூ. 3,799 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணம், தற்போது, ரூ. 2,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேப்போல், பல்வேறு பயண திட்டங்களுக்கான கட்டணங்கள், சலுகை அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன.