இன்று சர்வதேச இயற்கை பேரிடர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்., 13 சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பேரிடர் மேலாண்மையின் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளில், மக்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதியை சர்வதேச பேரிடர் கட்டுபாட்டு தினமாக ஐ.நா சபை அறிவித்தது.

இயற்கை பேரழிவு, உயிரிழப்பை மட்டுமல்லாமல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதால் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

உலகில் ஆண்டுதோறும் ரூ. 204 லட்சம் கோடி அளவில் சேதம் ஏற்படுகிறது. இதில் அதிக உயிரிழப்பு, பொருளாதார சேதம் ஆசியாவில் தான் நிகழ்கிறது.

மனிதருக்கு நிகழும் செயற்கை பேரழிவோடு, நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், எரிமலை வெடிப்பு, நோய் கூறுகள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களினாலும் பேரழிவு நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திட்டமிடல் மற்றும் பேரிடர் விழிப்புணர்வு போன்றவற்றால் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தடுக்க வழிவகுக்கும்.

மக்கள் இயற்கை பேரிடர்களிலிருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்த விழிப்புணர்வையும், வழிமுறைகளையும் அறிந்துக்கொள்வது மிகவும் அவசியம்.