பிரண்ட்ஸ் உடன் கோவாவுக்க் ஒரு ஜாலி ட்ரிப் !

கடற்கரைகள், அழகான கிராமங்கள், வளமான வரலாறு மற்றும் துடிப்பான கலாச்சாரம் ஆகியவற்றிற்கு கோவா பிரபலமானது.

துத்சாகர் நீர்வீழ்ச்சி... மாண்டோவி ஆற்றில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

அகுவாடா கோட்டை... கோவாவின் மிகவும் சுவாரஸ்யமான கோட்டைகளில் ஒன்றான இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது.

அஞ்சுனா பிளே... புதன்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும் ஒரு பல்பொருள் சந்தை இது. அழகிய ஆடைகள் துவங்கி ஆடம்பர எலக்ட்ரானிக் சாதனங்கள் வரை இங்கு வாங்கலாம்.

சலீம் அலி பறவைகள் சரணாலயம்... சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயத்தில் பல்புல்ஸ், கிங்ஃபிஷர்ஸ், ஹார்ன்பில்ஸ் போன்ற அரிய பறவை இனங்களை பார்க்கலாம்.

லாம்காவ் குகைகள்... இவை கி.பி 6 முதல் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. போஜா வம்சத்தின் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

சின்குரிம் பீஸ்... இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாராசெய்லிங், ஸ்கூபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.