அதிகரித்து வரும் போக்சோ குற்றங்கள்... பெற்றோருக்கு வேண்டும் விழிப்புணர்வு
பெண் சிறார்கள் மீது பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதால், குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகளை கண்காணிக்க, சரிவர நேரம் கிடைப்பதில்லை.
குழந்தைகள் மொபைல் போனை தவறாக பயன்படுத்துவது, முக்கியமாக, மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகித்தல் போன்றவற்றாலும், பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது.
போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற குற்றச் செயல்களை குறைக்கலாம்.
மேலும், மொபைல் போன் பயன்பாடு குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். 'சைல்டு லாக்' போட்டு கொடுத்து விட்டால் பிரச்னையை தவிர்க்கலாம்.